Sunday, October 21, 2018

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 2020-இல் 60 சதவீதமாக உயரும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 2020-இல் 60 சதவீதமாக உயரும்:
அமைச்சர் கே.பி.அன்பழகன்
🌹🌹🌹தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை
2020 -ஆம் ஆண்டில் 60 சதவீதமாக உயரும் என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு ஆயத்தம்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்காததால், மாணவர்கள் பழைய பள்ளிக்கு வர தயங்குகின்றனர்.இதனால், கடந்தாண்டு படித்தோரில், மீண்டும் அதே பள்ளியில் கல்வி தொடர விரும்புவோர் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது. 

Sunday, July 29, 2018

கணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் புதிய விதிகள் அறிவிப்பு

அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, கல்வித் தகுதியை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Saturday, June 16, 2018

நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் புதிய கல்விமுறை!

பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் நாடு முழுவதும் 10 லட்சம் பள்ளிகளில் 16.60 கோடி குழந்தைகளுக்கு புதிய கல்விமுறையை 2018-19 கல்வியாண்டு முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

Friday, June 15, 2018

பேராசிரியர்களுக்கு மத்திய அரசு, செக்

கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், அத்துறையில் பல அதிரடி மாற்றங்களை
அமல்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது

Thursday, June 14, 2018

புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறையில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்களை காலி செய்து சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.

Monday, October 9, 2017

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை!

 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் உணவு, தண்ணீர் இன்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என உ.பி., அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் எச்சரித்துள்ளார். அமைச்சர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tuesday, September 12, 2017

ஆலோசனை அளித்திருந்தால் மரணத்தை தடுத்திருக்கலாம்; ஐகோர்ட்

மருத்துவப் படிப்புக்கான, ’நீட்’ தேர்வில் தோல்வி யுற்றவர்களுக்கு, உரிய ஆலோசனைகள் அளித்திருந்தால், மாணவி அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்க முடியும்,” என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

Friday, August 11, 2017

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !!

நாடு முழுவதும் மே 7ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசு அந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்ைல.

Wednesday, May 17, 2017

25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க மே 25 வரை கால அவகாசம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 % இட ஒதுக்கீட்டில் சேர்க்க மே 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. - தமிழக அரசின் செய்தி வெளியீடு. (நாள்: 17.05.2017)

Wednesday, May 10, 2017

நீட் தேர்வு கட்டுப்பாடு; சிபிஎஸ்இ விளக்கம்

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அளித்துள்ள விக்கத்தில், கடந்தாண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. 

Thursday, March 9, 2017

ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tuesday, December 29, 2015

பள்ளி மாணவர்களுக்கு டூவீலர் அவசியமா?

திருப்பூர்: நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வைபள்ளிகல்லூரி மாணவர் மத்தியில் ஏற்படுத்த,கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, January 14, 2015

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர். 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநிலம் முழுவதும் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன்பிறகு, அந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டு இறுதி விடைகள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பிப்ரவரியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளது. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தேர்வில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆள்மாறாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகைப்படங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.