Tuesday, December 29, 2015

பள்ளி மாணவர்களுக்கு டூவீலர் அவசியமா?

திருப்பூர்: நாளுக்குநாள் அதிகரித்து வரும் சாலை விபத்து குறித்த விழிப்புணர்வைபள்ளிகல்லூரி மாணவர் மத்தியில் ஏற்படுத்த,கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக எண்ணிக்கையில் வாகன போக்குவரத்துஅதற்கேற்ப ரோடு வசதி இல்லாமைவிதிமுறை பின்பற்றாதது போன்ற காரணங்களால்அதிகளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. இதில்கொடுங்காயம் ஏற்பட்டு சிலர்மாதக்கணக்கில் சிகிச்சை பெறும் அவலம் ஏற்படுகிறது. சிலர்கை மற்றும் கால்களை இழந்துமுடமாகின்றனர். உயிரிழப் பும் ஏற்படுவது அடிக்கடி நடக்கிறது.
சாலை விபத்தில்பள்ளிகல்லூரி மாணவமாணவியர் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. டீன்-ஏஜ் வயது மாணவமாணவியர்அதிவேகம் கொண்ட டூவீலர்களில்பறப்பதுசில நேரங்களில் உயிரை பறித்து விடுகிறது. போக்குவரத்து அதிகமுள்ள ரோடுநெரிசலான பகுதிகள்அபாய வளைவுகளில்,நிதானமின்றி வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதுஎதிரில் திடீரென வாகனம் வந்தாலோ அல்லது வாகனம் கட்டுப் பாட்டை இழந்தாலோநிலைகுலைந்து விபத்தில் சிக்குகின்றனர்.
18 வயது நிரம்பாதடிரைவிங் லைசென்ஸ் பெறாத எவரும் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதியில்லை என்ற மோட்டார் வாகன போக்கு வரத்து சட்டம்மாணவ - மாணவியருக்கு பொருந்தும் என்பதைஆர்.டி.ஓ.அதிகாரிகளும்போலீசாரும் மறந்து போனது துரதிஷ்டமானது.
மேலும்பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால்டூவீலர் வாங்கித்தருவதாக,பெற்றோரில் சிலர்குழந்தைளுக்கு ஆசைவார்த்தை காட்டிஅவர்களை தூண்டுகின்றனர். அதன்பின்,பிள்ளைகள் கேட்கும் வாகனத்தை வாங்கித்தரும் அவர்கள்கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்டிப்பதில்லை.
திருப்பூர் ரோடுகளில் காலைமாலை நேரங்களில் இரண்டு பேர்மூன்று பேராக மாணவமாணவியர் வாகனங்களில்கட்டுப்பாடற்ற வேகத்தில்வளைந்து நெளிந்து ஓட்டிச் செல்வதுமற்ற வாகன ஓட்டிகளுக்கு கிலியை ஏற்படுத்துகிறது. மாணவர்களில் பலர்ஹெல்மெட்&'டும் அணிவதில்லை.
பள்ளிகள் சார்பில்சாலை விழிப்புணர்வு ஊர்வலம்பேச்சுகட்டுரை போட்டி நடத்துவதோடு ஆசிரியர்களின் கடமை முடிந்து விடுகிறது என நினைக்கின்றனர். ஆசிரியர்களை கேட்டால்பள்ளி வளாகத்தில் மட்டுமே மாணவமாணவியரை கட்டுப்படுத்த முடியும்வெளியிடங்களுக்கு அவர்கள் வாகனங்களில் செல்வதை தடுக்க வாய்ப்பில்லை எனதட்டிக்கழிக்கின்றனர்.
பிள்ளை நன்றாக படித்துஅதிக மதிப்பெண் பெற்றுசிறந்த வேலைவாய்ப்பு கிடைத்துஎதிர்காலம் பிரகாசமாக அமைய வேண்டும் என்ற கனவுஅனைத்து பெற்றோருக்கும் உண்டு. அதே நேரத்தில்,விடலை பருவத்தில் உள்ள அவர்களுக்கு பொறுப்புணர்வு குறித்தும்விபத்தால் ஏற்படும் பாதிப்புஉயிர் பாதுகாப்பு குறித்தும் தேவையான அறிவுரை வழங்குவது பெற்றோரின் தலையாய கடமை. இதில்,பள்ளி நிர்வாகங்களும் முன்வந்து செயல்பட வேண்டும். பெற்றோரும்கல்வித்துறையும் கைகோர்த்து,சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வைமாணவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment