Monday, October 9, 2017

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறை!

 பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் உணவு, தண்ணீர் இன்றி சிறையில் அடைக்கப்படுவார்கள் என உ.பி., அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் எச்சரித்துள்ளார். அமைச்சர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்தா பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டத்தை எனது விருப்பப்படி மாற்றப் போகிறேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பான பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் 5 நாட்கள் அடைக்கப்படுவர். அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ வழங்கப்படாது. நீங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் உங்களை போலீஸ் பிடித்துச் செல்லும்.

உங்களுக்கு அளிக்கும் தண்டனையால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அப்படியும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், 6 மாதம் வரை சிறையில் அடைக்கப்படுவீர்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கவும் நான் தயாராக உள்ளேன் என்றார்.

அமைச்சர்களின் இந்த பேச்சு சர்ச்சையாக்கப்பட்டு, எதிர்ப்பு எழுந்துள்ளது. அது பற்றி கூறிய ராஜ்பர், நான் கடுமையாக சொன்ன வார்த்தையில் என்ன தவறு உள்ளது. அரசு கல்விக்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தும் இவர்கள் ஏன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. இத குறித்து முதல்வரிடமும் பேச உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment