Friday, June 15, 2018

பேராசிரியர்களுக்கு மத்திய அரசு, செக்

கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்தும் வகையில், அத்துறையில் பல அதிரடி மாற்றங்களை
அமல்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது
. இதன் ஒரு பகுதியாக, கல்லுாரிகளில், பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற, முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும். கல்வித்துறையில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் நாட்டின் பல்கலை மற்றும் கல்லுாரிகளில், கல்வியின் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, திறன் வாய்ந்த கல்வியாளர்களை, பேராசிரியர்களாக நியமிக்க திட்டமிட்டு உள்ளோம்.
அதன் படி, வெளிநாட்டு பல்கலைகளில், முனைவர் பட்டம் பெற்றவர்களும், இந்திய பல்கலைகளில் பேராசிரியர்களாக வேலை வாய்ப்பு பெறலாம். எனினும், உலகின் தலை சிறந்த, 500 பல்கலைகளில் ஏதேனும் ஒன்றில், அவர்கள், டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பதவி உயர்வு பெற, முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும். எனினும், இந்த நடைமுறை, 2021 முதல் அமலுக்கு வரும்.
பல்கலை பேராசிரியர்கள், கட்டாயம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், கல்லுாரிகளில் பணியாற்றுவோர், பாடங்களை பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்தினால் போதும். திறந்தவெளி, &'ஆன்லைன்&' படிப்புகளில் பங்களிப்பு தரும் ஆசிரியர்களுக்கு, &'வெயிட்டேஜ்&' மதிப்பெண் வழங்கப்படும். கல்லுாரி, பல்கலைகளில், புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு, ஒரு மாதம் பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.
ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்காக, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் சாதிக்கும் வகையில், திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பல்கலை, கல்லுாரி ஆசிரியர்களுக்கான பழைய மதிப்பீட்டு முறைக்கு பதில், புதிய நடைமுறை பின்பற்றப்படும். ஆராய்ச்சி மாணவர்களை கண்காணிக்கவும், அவர்களை வழிநடத்தவும், கல்லுாரிகளுக்கு, பல்கலைக்கழகங்கள் போதிய உதவிகளை செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment