Tuesday, September 12, 2017

ஆலோசனை அளித்திருந்தால் மரணத்தை தடுத்திருக்கலாம்; ஐகோர்ட்

மருத்துவப் படிப்புக்கான, ’நீட்’ தேர்வில் தோல்வி யுற்றவர்களுக்கு, உரிய ஆலோசனைகள் அளித்திருந்தால், மாணவி அனிதாவின் தற்கொலையை தடுத்திருக்க முடியும்,” என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

உடுமலைபேட்டையைச் சேர்ந்த, கிருத்திகா என்ற மாணவி, பிளஸ் 2 மதிப்பெண்படி, ௧௯௯.௨௫, ’கட் - ஆப்’ மதிப்பெண் எடுத்திருந்தார். 

நிராகரிப்பு : மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க, அனுமதி கோரிய மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். ’நீட்’ தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர் சேர்க்கையை நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், கிருத்திகாவின் கோரிக்கையை, நீதிபதி நிராகரித்தார். 

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ’நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் மன உளைச்சலில் உள்ளனர். ’அவர்கள், விபரீத முடிவுகளை எடுக்கக்கூடும். அவர்களுக்கு தன்னம்பிக்கை, உறுதி அளிக்கும் வகையில், கல்வியாளர்கள் மற்றும் பிரபலங்கள் வாயிலாக, ஆலோசனைகள் வழங்க வேண்டும்’ என, அறிவுறுத்தினார். அரசுக்கு, சில வழிகாட்டுதல்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. 

நிபுணர் குழு

அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில், எவை எவை அமல்படுத்தப்பட்டு உள்ளன என, அரசு வழக்கறிஞரிடம், நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, அரசு வழக்கறிஞர், ’நீதிமன்ற உத்தரவு கிடைத்த உடன், அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
அதற்கு, நீதிபதி கிருபாகரன், ”நீதிமன்ற உத்தரவு, அன்றே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.

”பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாக செயல்பட்டிருந்தால், அனிதாவின் மரணத்தை தடுத்திருக்கலாம்; அரசின் பொறுப்பற்ற தனமும், இதற்கு காரணம்,” என்றார். பின், நீதிமன்ற உத்தரவின்படி, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ௧௫ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், ’சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளிக்க, நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்’ என, கோரியுள்ளார். இம்மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment